அடுத்த சீசனில் கமல் இல்லையாம்..? இந்த நடிகர் தானாம்..? அதிர்ச்சி தகவல்..!

1503

இந்தியாவின் மிகவும் முக்கியமான ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்-பாஸ் தான். பிக்-பாஸ் சீசன் தொடங்கிவிட்டாலே, 100- நாட்களும் மீம் கிரியேட்டர்களும், நெட்டிசன்களும் படு குஷியாகி விடுவார்கள்.

இதற்கு முக்கிய காரணம் அந்த ஷோவில் ஏற்படும் சார்ச்சைகளும், சண்டைகளும் தான். இது ஒரு புறமிருக்க, கமலின் பேச்சுக்காகவும், சிலர் பிக்-பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.

வாரம் முழுவதும் போரடித்தாலும், கமல் வரும் அந்த எபிசோட் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும். இந்நிலையில் பிக்-பாசின் அடுத்த சீசனை கமல் தொகுத்து வழங்கமாட்டார் என்றும், சிம்பு தான் தொகுத்து வழங்குவார் என்றும் இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.

இந்த தகவலில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்று தெரியவில்லை. இந்த தகவல் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகவும் மாறியுள்ளது.