சிம்புவின் அடுத்த படம் இந்த பிரபல நடிகருடன் தான்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

658

சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்திற்குப் பிறகு சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ஹமாநாடு’ படத்திற்காக தயாராகி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் முத்தையா இயக்கத்தில் ‘தேவராட்டம்’ படத்தில் கவுதம் கார்த்திக் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் சிம்பு – கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை ஸ்டூடியோ கிரீன் படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

“எஸ்.டி.ஆருடன் முதல் தடவையாக சேர்வதில் மிகுந்த ஆர்வத்துடனுள்ளோம்.

அதிக பெருட்செலவில் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகவுள்ள இந்தப் படத்தில் கவுதம் கார்த்திக்கும் நடிக்கிறார்.

படத்தை இயக்குனர் நார்தன் இயக்குகிறார். மதன் கார்க்கி பணியாற்றுகிறார்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் நார்தன் கன்னடத்தில் மஃப்டி என்ற வெற்றிப் படத்தை இயக்கியவர் என்பது கவனிக்கத்தக்கது. அதேபோல் இது நடிகர் சிம்புவின் 45-வது படமாக அமையவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of