மாநாடு படத்திலிருந்து தூக்கப்பட்ட சிம்பு..? அதிர்ச்சியில் இருக்கும் ரசிகர்கள்..!

627

இயக்குநர் வெங்கட் பிரபு கடைசியாக எடுத்தப்படம் சென்னை – 28-ன் இரண்டாம் பாகம். இந்த படம் வெற்றிப் பெற்றதைத்தொடர்ந்து, சிம்பு நடிப்பில் மாநாடு படத்தை எடுக்க முடிவு செய்தார்.

இதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது என்று கூறப்பட்ட நிலையில், படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-

“வணக்கம்… நான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.. மிக மிக வருத்தத்திற்குரிய ஒரு முடிவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அன்புத் தம்பி சிம்பு அவர்கள் ஒரு பெரிய பொறுப்பை கொடுத்தார். தன்னை வைத்து மாநாடு படத்தை எடுக்க என்னை தூண்டி…

துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் காலமும் நேரமும் கடந்துகொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்கிறவன் அந்த தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறான் என்று நம்புகிறவன் நான்.

ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிழ்ந்ததே தவிர படம் தொடங்க இயலவில்லை. அதனால் சிம்பு ‘நடிக்க இருந்த’ மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும். இதுவரை என்மீது அன்பு செலுத்திய அவரின் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

பத்திரிகையாளர்கள் அவ்வளவு துணை நின்றார்கள். எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும். அனைவருக்கும் நன்றியும் அன்பும்!!.”

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து, சிம்பு மாநாடு படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனால் சிம்புவின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of