3 சிம்பன்சி குரங்குகளை பறிமுதல் செய்த அமலாக்கத்துறை..!

290

மேற்குவங்க மாநிலத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கு விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்டவரின் வீட்டில் இருந்து 3 சிம்பன்சி குரங்குகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

கொல்கத்தாவைச் சேர்ந்த சுப்ரதீப் குப்தா என்பவர் வனத்துறை அனுமதி அளித்தாக போலியான ஆவணங்களை அளித்து காட்டில் வாழும் பறவைகளை இடமாற்ற முயன்றதாக காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

பின்னர் போலீசின் முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக கொண்டு சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச்சட்டத்தின் கீழ் இந்த வழக்கை ஏற்று அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது.

சுப்ரதீப் குப்தா வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக விலங்குகளை கொண்டு வந்து விற்பனை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. சட்டவிரோத பணப்பறிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் சொத்துக்களை முடக்கவும் கைப்பற்றவும் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது.

அந்த வகையில் சுப்ரதீப் குப்தா வீட்டில் நடத்திய சோதனையில் தலா 25 லட்சம் மதிப்புள்ள 3 சிம்பன்சி குரங்கும், தலா ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள மார்மோசெட் எனப்படும் சிறிய வகை குரங்குகள் நான்கும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சுங்க மற்றும் வனவாழ்வு சட்டங்களில் இருந்து தப்பித்துக்கொள்ள அதிகாரிகளிடம் பொய்யான தகவல்களை குப்தா தெரிவித்து உள்ளதாகவும் அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of