துணிக்கு சோப்பு போட்டு துவைக்கும் சிம்பன்சி..! வைரல் வீடியோ..!

1168

சீனாவில் உள்ள வன உயிரின பூங்கா ஒன்றில் சிம்பன்சி குரங்கு, துணிக்கு சோப்பு போட்டு துவைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைராலாகி வருகிறது.

சீனாவின் லோகோஜாய் வன உயிரின பூங்காவில் இருக்கும் யூகுய் என்ற ஆண் சிம்பன்சி குரங்கிற்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் சலவைத் தொழிலாளிகளால் துணி துவைக்க கற்றுத்தரப்பட்டது.

இதனை நன்கு உன்னிப்பாக கவனித்த அக்குரங்கு, கைக்கு கிடைக்கும் துணியை சோப் போட்டு துவைத்து வருகிறது. மனிதர்களைப் போன்றே சோப் போட்டு துணி துவைக்கும் இந்த குரங்கு சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

அதுமட்டுமின்றி இந்த மனிதர்களைப் போன்று கை தட்டுதல், தண்டால் எடுத்தல் போன்றவற்றை செய்து அசத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. குரங்கின் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement