சிங்கப்பூரில் ஒரு மாதத்துக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு

629

சிங்கப்பூரையும் விட்டு வைக்காத கொரோனா தனது கோர முகத்தை அங்கையும் காட்டி வருகிறது. சிங்கப்பூரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டி உள்ளது.

5 பேர் உயிரிழந்துள்ளனர். தினந்தோறும் வைரஸ் நோய் காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. நேற்றைய முன்தினம் புதிதாக 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதில் 7 பேர் இந்தியர்கள். இவர்களில் 54 பேர் உள்ளூர்வாசிகள் எனவும் யாரும் வெளிநாடுசென்று வரவில்லை எனவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 245 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீட்டிற்கு திரும்பி உள்ளனர். 457 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இவ்வாறு அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக சிங்கப்பூரில் வரும் ஏப்ரல் 7 முதல் ஒரு மாதத்துக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of