வெளியாக இருக்கும் சிங்கப்பெண்ணே..! இந்த முறை இவங்க தான் வெளியிடுறாங்க…! தமிழ் ராக்கர்ஸ் இல்லை…,!

722

இயக்குநர் அட்லியும், இளையதளபதி விஜயும் மூன்றாவது முறையாக கூட்டணி சேரும் திரைப்படம் பிகில். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், சமூக வலைதளங்களில் பிகில் படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இதனால் படக்குழு உட்பட விஜய் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் வெளியிடப்படும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சோனி மியுசிக் சவுத் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பது பின்வருமாறு:-

“சிங்கப்பெண்ணே பாடல் வரும் ஜுலை 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ஏ.ஆர்.ரகுமானின் பவர் ஃபுல்லான மியுசிக் டிராக்கை காண தயாராக இருங்கள்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.