மிமிக்ரி கலைஞரை மணந்தார் பின்னணிப் பாடகி வைக்கம் விஜயலட்சுமி

383

கேரள மாநிலம் வைக்கம் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. செல்லுலாய்ட் என்ற திரைப்படம் மூலம் பாடகியாக அறிமுகமான இவர் மலையாளம், தமிழ் திரையுலகில் பல பாடல்களை பாடியுள்ளார். பாடல் மட்டுமல்லாது சிறந்த வீணை கலைஞராகவும் விஜயலட்சுமி திகழ்ந்தார்.

இந்நிலையில், வைக்கம் விஜயலட்சுமிக்கும், மிமிக்ரி கலைஞரான கேரளாவைச் சேர்ந்த அனூப் என்பவருக்கும், விஜயலட்சுமி பிறந்த இடமான வைக்கமில் உள்ள மஹாதேவா கோயிலில், கேரள பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. விஜயலட்சுமியின் குடும்ப நண்பரான அனூப், இன்டீரியர் டிசைனர் ஆவார். கடந்த செப்டம்பர் 10-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இன்று (அக்டோபர் 22) திருமணம் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here