பெரிய தோட்டத்தையே விழுங்கிய ஓட்டை! வைரலாகும் பரபரப்பு வீடியோ!

894

இயற்கைக்கு நாம் அளிக்கிறோமோ, இயற்கையும் அதைத் தான் நமக்கு அளிக்கும் என்று பல்வேறு காலமாக கூற்று ஒன்று உள்ளது. பெரும்பாலும் தற்போது உள்ள மனிதர்கள் இயற்கைக்கு எதிரான செயல்களிலேயே ஈடுபட்டு வருகிறோம் என்றும் கூறப்படுகிறது.

பொதுவாக உலகம் வெப்பம் ஆக ஆக இயற்கை சீற்றங்கள், பேரழிவுகள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. கடல் கொந்தளிப்பது, மழை பொய்ப்பது, தவறான காலத்தில் மழை பெய்து அழிவை ஏற்படுத்துவது.

சூறாவளி, புயல், நிலச்சரிவு, நிலநடுக்கம் ஏற்படுவது என்று உலகில் அடிக்கடி நிறைய இயற்கை பேரழிவுகள் நடக்கிறது. அதில் சிங்க் ஓல் எனப்படும் புதைகுழி அழிவும் ஒன்றாகும். சாதாரணமாக இருக்கும் பகுதி, திடீரென்று பூமிக்குள் சென்று அங்கு பெரிய குழி ஏற்படுவதுதான் சின்க்ஹோல் எனப்படும்.

இது பொதுவாக சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் அதிகம் நிகழும். இந்த நிலையில் ரஷ்யாவில் நேற்று கிராமம் ஒன்றில் சின்க்ஹோல் நிகழ்வு நடந்துள்ளது. மிகப்பெரிய சின்க்ஹோல் ஒன்று துலு நகரத்தில் உள்ள தேடிலோவா என்ற கிராமத்தில் உருவாகி உள்ளது. இந்த குழி மிக பிரம்மாண்டமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பல அடுக்கு மாடிக் கட்டிடம் அளவிற்கு இது ஆழமாக இருக்கிறது.

இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. இந்த பபுதைக்குழி காரணமாக அந்த பகுதியில் இருந்த மொத்த, தோட்டமும் பூமிக்கு உள்ளே சென்றுள்ளது. இதில் யாருககும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இது எப்படி நடந்தது என்று ஆராய்ச்சி நடந்து வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of