சிரின் மற்றும் அனுராதா. முதல் பெண் கமாண்டர்கள்.

333
hover9.3.19

மகளிர் தினம் நாடுமுழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடலோர காவல்படையின் நீரிலும், நிலத்திலும் செல்லக்கூடிய மிதவை கப்பலை (ஹோவர் கிராப்ட்-197) ஓட்டும் முதல் பெண் கமாண்டர்களான சிரின் சந்திரன், அனுராதா சுகுலா ஆகியோரை கவுரவிக்க திட்டமிட்டனர்.

அதன்படி, மிதவை கப்பலை ராமேசுவரம் மண்டபம் பகுதியில் இருந்து சென்னைக்கு, 240 கடல் மைல் தூரம் கடந்து அந்த 2 பெண் கமாண்டர்கள், மாலுமிகளுடன் நேற்று இயக்கி வந்தனர். இதுதான் அவர்கள் தொலைதூரத்துக்கு இயக்கி வந்த முதல் பயண அனுபவம். இந்த பயணத்தின்போது அவர்கள் கடலோர பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வந்தனர்.

கடந்த 6-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்ட இந்த மிதவை கப்பல், நேற்று முன்தினம் சென்னை வந்தடைய இருந்தது. ஆனால் கடல் சீற்றமாக காணப்பட்டதால், ஒரு நாள் தாமதமாக நேற்று சென்னை வந்தடைந்தது.

மகளிர் தினத்தையொட்டி கடலோர காவல்படையின் கம்பீர உடையணிந்து மிதவை கப்பலை இயக்கி வந்த 2 பெண் கமாண்டர்களை கடலோர காவல்படை ஐ.ஜி. பரமேஸ் வரவேற்றார். அவர்களுக்கு மகளிர் தின வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், முதல் பெண் கமாண்டர்களான அவர்களை வாழ்த்தியும் பேசினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of