இலங்கை அதிபர் தேர்தலில் சிறிசேன மீண்டும் போட்டி – சிறிபாலடி சில்வா

226

 

இலங்கை அதிபர் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக அதிபர் மைத்திரிபால சிறிசேனவே மீண்டும் போட்டியிடுவார் என அக்கட்சியின் மூத்த தலைவர் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கலின் போது இதுகுறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் கூறினார்.

சிறிசேன அதிபர் வேட்பாளராக நியமிக்கப்படுவதற்கு முன்னாள் மஹிந்த ராஜபக்சவும் தனது விருப்பத்தை தெரிவிப்பார் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கை அதிபர் தேர்தலை நடத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.