சிறுவனை வைத்து பயங்கரவாதிகளின் சதிச்செயல்! விசாரணையில் அம்பலம்!

271

காஷ்மீரின் ஜம்மு பஸ் நிலையத்தில் நேற்று கையெறி குண்டு வீசப்பட்டதில் இருவர் உயிரிழந்தனர். 32 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்துக்கு பயங்கரவாதிகளின் சதிச்செயல் காரணமா? என விசாரணை தொடங்கியது. போலீஸ் விசாரணையில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான், அவனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு போலீஸ் அனுப்பியது.

விசாரணையில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கம் சிறுவனை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.

பயங்கரவாத குழுக்கள் சிறுவர்களை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பயன்படுத்துவதன் மூலம் சட்டத்தின் கடும் தண்டனையிலிருந்து அவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள் என கூறும் போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த பஸ் நிலையத்தில் குண்டுவீசப்படுவது இது 3வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of