அக்காவும், தங்கச்சியும் அப்படி என்ன செஞ்சாங்க..? கொடூரமாக தாக்கிய கும்பல்..!

915

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே உள்ள தாகுர் கான் பகுதியை சேர்ந்த அக்கா மற்றும் தங்கை ஆகிய இருவரும் காய்கறி வியாபாரம் செய்து வருபவர்கள். காய்கறி வாங்க இவர்கள் இருவரும் உமெடன்பா பகுதியில் நடைபெற்ற வாரச்சந்தைக்கு சென்றுள்ளனர்.

காய்கறிகளை வாங்கிவிட்டு மீண்டும் வீடு திரும்பியபோது, காய்கறி தோட்டம் ஒன்றின் வழியாக வந்துள்ளனர். அப்போது அவர்களை பார்த்த கும்பல், 2 பேரும் காய்கறிகளை திருடுபவர்கள் என்று எண்ணி கட்டிப்போட்டு அடித்துள்ளனர்.

மேலும், பெண்களின் முடியையும் அறுத்துள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்த காவல்துறையினர், அந்த பெண்களை அவர்களிடம் இருந்து மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தாக்குதலில் ஈடுபட்ட 34 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்ற தாக்குதல் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of