இடைத்தேர்தல் தோல்வி எதிரொலி..! ராஜினாமா செய்த சித்தராமையா..!

340

கர்நாடக இடைத்தேர்தல் தோல்வி எதிரொலியாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடகாவில் நீயா நானா என்ற போட்டி நடைபெற்று வந்த நிலையில், இடைத்தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை தக்க வைத்து கொண்டது.

இதனையடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியன் சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பாக பெங்களுரூவில் செய்தியாளர்களிடம் பேசிய இவர், ராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பிவிட்டதாக தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of