போட்டியும் இல்லை பொறாமையும் இல்லை – சிவகார்த்திகேயன்

508
siva karthikeyan

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீமராஜா’ படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசியது என்னவென்றால் நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை என்று பெருமையுடன் கூறினார்.

சீமராஜா’ படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இப்படம் பொன்ராம் – சிவகார்த்திகேயன் இணைந்துள்ள மூன்றாவது படமாகும். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். நெப்போலியன், சிம்ரன், லால், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை 24 ஏஎம். ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது,
சீமராஜா படத்தின் டிரெய்லரில் கடைசி 3 காட்சிகளை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் சிலர் பாகுபலி மாதிரி இருக்கிறது என்று பாராட்டுகிறார்கள்.

அது எங்களுக்கும், எங்கள் உழைப்புக்கும் கிடைத்த பெருமை என மகிழ்ச்சியுடன் பதிவுசெய்தார்.இந்த படத்தை விநாயகர் சதுர்த்திக்கு வெளியிட திட்டமிட்டபோதே இடையில் ஸ்டிரைக் வந்தது.அதையும் தாண்டி படத்தை குறித்த தேதிக்கு வெளியிட உழைத்த ஒட்டுமொத்த குழுவுக்கும் நன்றி தெரிவித்தார். படத்தில் நான் ஒரு தமிழ் மன்னராக நடித்திருக்கிறேன். அது எனக்கு பெருமையான விஷயம்.

ரஜினி முருகன் படத்தின்போதே இந்த யோசனை பற்றி பொன்ராமும், நானும் பேசினோம். இந்த படத்தில் வரும் அதிரடி காட்சிகளை குழந்தைகளும் பார்க்கும் வகையில் வன்முறை இல்லாமல் செய்திருக்கிறோம்.அனைவரும் பார்க்ககூடிய அளவில் இருக்கும் என கூறினார். இப்படத்தில் காமெடியும் நிறையவே இருக்கிறது.

நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை, யாரை பார்த்தும் பயப்படுவதில்லை, பொறாமையும் கிடையாது, என் அடுத்த கட்டத்தை நோக்கி மட்டுமே பயணிக்கிறேன் என்று சிவகார்த்திகேயன் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here