சிவகார்த்திகேயனுக்கு தலைவலி – தேர்தல் ஆணையத்திற்கு பெரும்வலி

321

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலே சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த தேர்தல் அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரிசத்யபிரதா சாஹுஇன்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல்18ம் தேதி, தமிழகத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி,சென்னை தி.நகரில் உள்ள இந்தி பிரசார சபாவில் சிவகார்த்திகேயன் வாக்களிக்கச் சென்ற போது, அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அவரும் அதிர்ச்சியாகவே, பிறகு பட்டியலை சரிபார்த்து அவரது பெயர் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் சிவகார்த்திகேயன் வாக்களித்ததாக செய்தி வந்தது.

ஆனால், சிவகார்த்திகேயன் பெயர் பட்டியலில் இல்லாமலே அவர் வாக்களித்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரிசத்யபிரதா சாஹு கூறியிருந்தார்.

தொடர்ந்து இன்றுசெய்தியாளர்களிடம் பேசிய அவர், “வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலே சிவகார்த்திகேயன் வாக்களித்தது அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த தேர்தல் அலுவலர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

மேலும், “சிவகார்த்திகேயன் யாருக்கு வாக்களித்தார் என்பது தெரியாது.

அவர் விதிகளை மீறி வாக்களித்திருந்தாலும் அவரது வாக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்” என்றும் கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of