வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை! அப்செட்டான பிரபல நடிகர்கள்!

568

தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று காலை 8 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளியில் வாக்களிப்பதாக தகவல் வெளியானது.

ஆனால், அங்குள்ள பூத் எண் 303-ல் சிவகார்த்திகேயன் மனைவி கிருத்திகாவிற்கு மட்டுமே ஓட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் அவர் ஒட்டுப்போட செல்லவில்லை.

இதேபோல், சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவிரி பள்ளியில் ஓட்டுப்போடுவதற்காக துணை நடிகர் ரோபோ சங்கர் இன்று காலை 6.30 மணியிலிருந்து காத்திருந்தார். ஆனால் அவரது பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் அவராலும் ஓட்டுப்போட முடியவில்லை.

நடிகர் ரமேஷ் கண்ணாவிற்கும் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்பதால் அவர்களால் ஓட்டு போட முடியவில்லை.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of