ஆறு ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலி – ஈராக்

317
isterror10.3.19

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2017-ம் ஆண்டு பிற்பகுதியில் அங்கு தோற்கடிக்கப்பட்டு விட்டனர். இருப்பினும் அவர்களை முழுமையாக ஒடுக்கி விட முடியவில்லை.குறிப்பாக ஈராக்கின் கிழக்குப்பகுதியில் தியாலா மாகாணத்தில் இன்னும் அவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த மாகாணத்தின் தலைநகரான பாகுபா நகரில் இருந்து 2 கி.மீ. வட கிழக்கில் உள்ள ஹாவ்த் அல் வக்ப் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாதுகாப்பு படைகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி வந்தன. இந்த தாக்குதல் நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது. இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 6 பேர் பலியாகி உள்ளதாகவும், 7 பதுங்குமிடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of