இணையத்தில் வைரலாகும் இரும்புப் பெண்மணி.. யார் இவர்..?

3850

ஆண்கள் மட்டுமே கட்டுமஸ்தான உடலமைப்பு கொண்டிருக்க வேண்டும் என்ற ஒற்றை வரியை உடைந்தெறிந்துள்ளார் தெலங்கானவை சேர்ந்த உடற் பயிற்சியாளர். இவரின் புகைப்படங்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இணையத்தில் வைரலாகி வந்து கொண்டிருக்கின்றன.இவருக்கு வயது 45 .

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர் கிரண் டெம்ப்லா.( Kiran Dembla)

பிரபல நடிகைகளான தமன்னா, அனுஸ்கா ஷெட்டி போன்றோருக்கு இவர் பயிற்சியாளராகவும் உள்ளார். மலையேற்றத்தில் சிறந்த பயிற்சி பெற்றுள்ளார். உடற்பயிற்சி பயின்றுள்ள கிரண் அதற்கான பயிற்சி கூடத்தையும் வைத்துள்ளார்.

சிக்ஸ் பேக் வைத்திருக்கும் கிரண் தெலுங்கு திரையுலகில் பலரையும் ஆச்சர்ய படுத்தும் விதத்தில் தனது உடலை வைத்துள்ளார். பெண்கள் மட்டும் அல்ல, சில ஆண் பிரபலங்களுக்கும் இவர் பயிற்சியாளராக உள்ளார்.

இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஹங்கேரி (Hungary  )நாட்டின் புடாபெஸ்டில் (Budapest )நடந்த உலக உடற்கட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிற்காக பங்கேற்று நாட்டைப் பெருமை படுத்தியுள்ளார்.

Advertisement