பனிச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு!

224

காஷ்மீரில் பனிபடர்ந்த சியாச்சின் மலைப்பகுதியில் உள்ள ராணுவ வீரர்கள் முகாம் அருகே திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது.

இதில் ராணுவ வீரர்கள் உட்பட 8 பேர் சிக்கிக் கொண்டனர். பிற்பகல் சுமார் மூன்றரை மணியளவில் ஏற்பட்ட இந்த பனிச்சரிவில் அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த வீரர்கள் மற்றும் சுமைகளை தூக்கிச் செல்லும் ராணுவ போர்ட்டர்கள் சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து நடைபெற்ற மீட்பு பணியில் 4 வீரர்கள் உட்பட 6 பேர்  சடலங்களாக மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணியை ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of