சிக்கிம் முதல் மந்திரியாக பிரேம்சிங் தமாங் இன்று பதவி ஏற்கிறார்

381

சிக்கிமில் நாடாளுமன்ற தேர்தலுடன் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா கட்சி மொத்தம் உள்ள 32 இடங்களில் 17 தொகுதிகளில் வெற்றிபெற்று பெரும்பான்மை பெற்றது.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் பி.எஸ்.கோலே என்று அழைக்கப்படும் பிரேம்சிங் தமாங் சட்டமன்ற கட்சி தலைவராக (முதல்–மந்திரியாக) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் அவர் 2016–ம் ஆண்டு ஒரு ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்ததால் இதுகுறித்து சிக்கிம் கவர்னர் கங்கா பிரசாத் சட்ட ஆலோசனை நடத்தினார்.

அதன்பின்னர் அவர் தமாங்கை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்புவிடுத்தார். தமாங் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு காங்டாக் பால்ஜோர் ஸ்டேடியத்தில் சிக்கிம் முதல்–மந்தியாக பதவி ஏற்கிறார். அவருடன் சில மந்திரிகளும் பதவி ஏற்பார்கள் என தெரிகிறது.

பிரேம்சிங் தமாங் இந்த தேர்தலில் கட்சிக்காக பிரசாரம் மேற்கொள்வதற்காக போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of