“மண்ட பத்ரம்..” இணையத்தில் வைரலாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்..!

1197

( பொறுப்புத்துறப்பு : தயவு செய்து இதனை யாரும் முயற்சிக்க வேண்டாம். )

நாளுக்கு நாள் பல்வேறு சேலஞ்சுகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தற்போது புதிய சேலஞ்ச் ஒன்று இந்த வரிசையில் இணைந்திருக்கின்றது. இதுகுறித்து விரிவாக அலசுகிறது இந்த செய்தித்தொகுப்பு..

ஒரு நாள் ரூம் போட்டு அழுகலாமே என்று கூறும் அளவிற்கு, நாட்டில் பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில், சில நெட்டிசன்களோ வித்தியாச வித்தியாசமான சேலஞ்சுகளை உருவாக்கி வருகின்றனர்.

முகத்தில் கரப்பான் பூச்சியை படுக்கவைக்கும் சேலஞ்ச், சோட பாட்டிலை திறக்கும் சேலஞ்ச் என வினோத சேலஞ்சுகளுக்கு மத்தியில் புதியதாக பூத்திருக்கிறது மண்டையோட்டை உடைக்கும் சேலஞ்ச். அதாவது ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்.

இரண்டு பேர் சேர்ந்துக்கொண்டு, அப்பாவியாக வரும் 3-வது நபரின் மண்டையை திட்டம் தீட்டி, கீழே தள்ளி உடைப்பதே இந்த ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்.
விளையாட்டாக ஆரம்பிக்கப்பட்ட இந்த சேலஞ்ச், தற்போது பல்வேறு அப்பாவிகளின் மண்டைகளை பலமாக பதம் பார்த்துக்கொண்டிருக்கிறது.

இதனைப்பார்த்த சமூக ஆர்வலர்கள், இதைப்போன்ற சேலஞ்சுகளை உருவாக்குவதற்கு பதில், நல்ல சிந்தனைகளை உருவாக்குவதற்கும், ஆக்கப்பூர்வ செயல்களில் ஈடுபடுவதற்கும் உங்கள் அறிவை பயன்படுத்துங்கள் என்று நெட்டிசன்களுக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of