ஒவ்வொரு வீட்டு வாசலிலும் மண்டை ஓடு.. பழனியில் பரபரப்பு..!

379

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தேவாங்கர் என்ற தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள வீடுகளின் முன்பு, மனித எலும்புக் கூடுகள் கிடந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பிறகு, மண்டை ஓடுகளை அப்புறப்படுத்திய மக்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.