பீகார் ரயில் நிலையத்தில் மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் கண்டெடுப்பு

291

பீகார் மாநிலம், சப்பாரா ரயில் நிலையத்தில் மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் கொத்து கொத்தாக கிடைத்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரன் மாவட்டத்தில் சப்பாரா ரயில் நிலையத்தில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு சாக்கு மூட்டையில் ஏராளமான மனித மண்டை ஓடுகளும், மனித எலும்புகளும் இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, அந்த எலும்புகளைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில், அப்பகுதியைச் சேர்ந்த சஞ்சய் பிரசாத் என்பவரைக் கைது செய்தனர்.

இதுகுறித்து ரயில்வே துறை டிஎஸ்பி தன்வீர் அகமது கூறுகையில், ” சப்பாரா ரயில்நிலையத்தில் நேற்று காலை வழக்கம் போல் ரயில்வே பாதுகாப்புப்படையினர் ரோந்து சென்ற போது சந்தேகத்திற்குரிய சாக்கு மூட்டையை அவர்கள் பிரித்துப் பார்த்தபோது, அதில் 16 மனித மண்டை ஓடுகளும், 34 மனித எலும்புகளும் இருந்தன.

மேலும் பூடான் நாட்டு கரன்சிகளும், பல்வேறு நாடுகளின் ஏடிஎம் கார்டுகள், சிம்கார்டுகள் இருந்தன. பின்னர் அப்பகுதியில் போலீசார் விசாரணை நடத்தியபோது, இந்த மூட்டையை இங்கு வைத்துவிட்டுச் சென்ற சஞ்சய் பிரசாத் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.அவரிடம் விசாரணை நடத்தியதில், உத்தரப்பிரதேசம் பாலியா நகரில் இருந்து இந்த மனித மண்டை ஓடுகளையும், எலும்புகளையும் கொண்டு வருவதாகவும், மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி வழியாக பூடானுக்கு கொண்டு செல்ல இருந்ததாகவும் செல்வதாகவும் தெரிவித்தார். மாந்திரீக செயல்கள் செய்பவர்களுக்கு மனித எலும்புகளை சப்ளை செய்யும் பணியை பிரசாத் செய்துவந்துள்ளார் என தெரிகிறது. விசாரணைக்குப்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்றார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of