தஞ்சையில் பெரியார் சிலைக்கு காலணிகளால் மாலை அணிவிக்கப்பட்டதால் பரபரப்பு

596

தஞ்சை அருகே தந்தை பெரியார் சிலைக்கு காலணிகளால் மாலை அணிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு – மன்னார்குடி சாலையில் உள்ள காவாரப்பட்டு கிராமத்தில் 10 அடி உயரமுள்ள தந்தை பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை 4 பேர் கொண்ட கும்பல் பெரியார் சிலைக்கு காலணிகளால் மாலை அணிவித்து அவமதிப்பு செய்துள்ளனர்.

இது குறித்து அங்குள்ள பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், ஒரத்தநாடு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனை கண்டித்து திராவிட கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Advertisement