பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம்! இளைஞன் மீது சரமாரி அடி உதை!!

877

கடந்த வியாழக்கிழமை ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் படை வீரர்கள் பலியானார்கள்.

இந்த தாக்குதல் இந்தியாவில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் ஆகும். இந்த தாக்குதலுக்கு எதிராக பல இடங்களில் பேரணிகளும் போராட்டங்களும் இந்தியாவில் நடந்து வருகிறது.

இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் பஸ்தி என்ற பகுதியில் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கடந்த சனிக்கிழமை நடந்த இந்த பேரணியில் பேகம் கார் இன்டர் காலேஜ் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் பலரும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியில் கலந்து கொண்ட முகமது காலித் என்ற இளைஞர், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினான்.

அதேபோல் இந்தியாவிற்கு எதிராகவும் கோஷம் எழுப்பி இருக்கிறான். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் காலித் மீது சரமாரி தாக்குதலை நடத்தினார்கள். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அந்த இளைஞரை கைது செய்தனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of