கிரிக்கெட் பந்தின் மீதான ஆசை..! சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..! அலட்சியமே காரணம்..!

580

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள புளியம்பாறை பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ஓனம் பண்டிகை என்பதால், பள்ளி 2.30 மணி வரை நடைபெற்று, பிறகு சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதனால் பள்ளியில் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அணைவரும் வீட்டிற்கு சென்றுள்ளனர். 4-ஆம் வகுப்பு படிக்கும் ஹரிஹரன் மட்டும் பள்ளியிலேயே இருந்துள்ளான்.

பள்ளி வளாகத்தில் மாணவர்கள் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். அப்படி விளையாடும்போது அருகில் உள்ள மேற்கூரையில் பந்துகள் மாட்டிக்கொள்ளும். கூரை என்பதாலும் மின்கம்பி தாழ்வாகச் செல்வதாலும் மேலே ஏறி பந்துகளை எடுக்கச் சென்றால் ஆசிரியர்கள் திட்டுவார்கள் என்ற பயத்தில் மாணவர்கள் பந்துகளை எடுக்காமல் அப்படியே விட்டுவிடுவது வழக்கம்.

அந்த பந்துகளை மேலே ஏறி எடுக்க ஆசைப்பட்டுள்ளான சிறுவன் ஹரிஹரன். மேலே ஏறிய சிறுவன், மின்கம்பி மீது உரசியதால், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

மின்சார கம்பி தாழ்வாக இருந்ததே சிறுவனின் உயிரிழப்புக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் மின்சார ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

தற்போது இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நம் நாட்டில் நிறைந்திருக்கும் அலட்சியம் இன்னும் எத்தனை உயிர்களை தான் பறிக்கப்போகிறதோ..,

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of