80 வயது மூதாட்டி – சிறுவனின் பகீர் செயல்

348

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள குவாகம் காலனியில், சிவகாமி என்ற 80 வயது மூதாட்டி தனியாக வசித்து வந்தார். இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்புமர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

இதுகுறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில், மூதாட்டி  கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், அப்பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன், மூதாட்டி அணிந்திருந்த அரை சவரன் நகைக்காக, அவரது முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து, சிறுவனை கைது செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவின் பேரில், திருச்சி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சிறுவனை அடைத்தனர்.

Advertisement