சிறுமி பாலியல் வன்கொடுமை – திரை பிரபலங்கள் கண்டனம்

174

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஆவுடையார்கோவில் அருகே மன நிலை பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலைசெய்யப்பட்ட சம்பவத்திற்கு திரையுலக பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திரைப்பட இயக்குநரான பா.ரஞ்சித், இனி இன்னொரு குழந்தை பாதிக்காமல் இருக்க தக்க பாதுகாப்பை ஏற்படுத்த நாம் ஒவ்வொருவரும் உறுதி ஏற்போம் என தெரிவித்துள்ளார்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக நடிகை வரலட்சுமி, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு குழந்தை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், இப்படிப்பட்ட உலகில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால் நாம் அனைவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சாக தகுதியுடையவர்கள் தான் என குறிப்பிட்டுள்ளார்.

அது தான் மனிதர்களாகிய நமக்கு கடவுளின் பதிலாகவும் இருக்கும் என்றும், நாம் அனைவரும் வாழத்தகுதி அற்றவர்கள் எனவும் நடிகை வரலட்சுமி பதிவிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of