3 ஆண்டுகளாக தாயின் திருமணத்தை மீறிய உறவு..! மகளுக்கு ஏற்பட்ட விளைவு..! கைது செய்த போலீசார்..!

63165

சென்னை ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயல் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஷேக் முகமது. அண்ணனூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில், இறைச்சி வியாபாரம் செய்து வரும் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.

அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்த ஷேக் முகமது, கள்ளக்காதலியின் 12-வயது மகளிடம் கடந்த 2017-ஆம் ஆண்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதனையறிந்த சிறுமியின் தாய், கண்டித்ததையடுத்து, ஷேக் முகமது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

இதற்கு அப்பெண்ணும், ஷேக் முகமதுவை மன்னித்த நிலையில், நேற்று மாலை ஷேக்முகமது மீண்டும் அப்பெண் வீட்டுக்கு சென்று, சிறுமியை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தகராறு செய்துள்ளார்.

மேலும், தனது கள்ளக்காதலியையும் அடித்து உதைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து, அப்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ஷேக் முகமதுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். பின்னர், நீதிபதி உத்தரவின் பேரில் அவரை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.