காதலுக்கு தூது சென்ற சிறுமி..! சிறுமியையே இரையாக்கிய கொடூரம்..! திடுக் சம்பவம்..!

421

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். சிறுமியின் வீட்டிற்கு அருகே 17 வயதுடைய சிறுவனும் வசித்து வந்திருக்கிறான்.

இந்நிலையில் 17 வயது சிறுவன், வேறொரு பெண்ணை காதலித்து வந்துள்ளான். தன் காதலை அந்த பெண்ணிடம் தெரிவிக்க சிறுமியை அடிக்கடி பயன்படுத்தியிருக்கிறான். ஒரு கட்டத்தில் சிறுமியின் மீது, 17 வயது சிறுவனுக்கு மோகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, அவரை மிரட்டி அந்த சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்தான். மேலும், இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தால், கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளான். இதையடுத்து சிறுமி கற்பமடைந்துள்ளார்.

சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று கேட்டுள்ளனர்.

இதற்கு கண்ணீருடன் பதில் அளித்த அந்த சிறுமி, நடந்தவற்றை கூறியுள்ளார். இதையடுத்து தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் சிறுவன் மீது புகார் அளித்தனர். அதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of