“கொஞ்சம் தண்ணி தரியாம்மா..” வீட்டிற்குள் நுழைந்த காய்கறி வியாபாரி.. 12-வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..

565

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 12-வயது சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டு, வீட்டின் கதவை திறந்தார். வீட்டின் வெளியே நின்றுக்கொண்டிருந்த நபர், தண்ணீர் கொஞ்சம் தரமுடியுமா என்று அந்த சிறுமியிடம் கேட்டுள்ளார்.

பின்னர் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த அவர், சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். உடனே சிறுமி சத்தம் போடவே, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு வந்துள்ளனர்.

பிறகு அவரை பிடித்து, தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், கோத்தகிரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில், இவர் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், காய்கறி வியாபாரம் செய்ய கோத்தகிரி வந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், இவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

வீட்டில் தனியாக இருந்த 12-வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை தந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.