தாய் தந்தை கண்முன்னே பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்..!

490

சென்னை அடுத்த பம்மலில் தண்ணீர் லாரி மோதி ஒரு வயது பெண் குழந்தை, தாய்-தந்தை கண்முன்னே  தலை நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் தனது இரு மகள், மனைவியுடன் ஆதார் கார்டு சம்பந்தமாக, இருசக்கர வாகனத்தில் பம்மல் நகராட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

பணிகளை முடித்திவிட்டு, பல்லாவரம் செல்வதற்காக, சாலை சந்திப்பில் நின்று கொண்டிருந்த போது, தறிக்கெட்டு ஓடி வந்த லாரி, இவர்கள் மீது மோதியது. இதில் ஒரு வயது பெண் குழந்தை சர்வேஸ்வரி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானது.

மேலும் ராஜாவின் மனைவி சிந்துவின் மீது லாரி மோதியதில், பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் குரேம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த கோரா விபத்தை தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த போதுமக்கள் லாரி ஓட்டுனரை பிடித்து சரமாரியாக தாக்கினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. கணவன் கண்முன்னே, மனைவி, மகளும் விபத்தில் சிக்கி ஒரு வயது மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.