சிறுமிக்கு ஏற்பட்ட சிறு காயம்..! அலட்சியமாக இருந்த ஆசிரியர்கள்..! இறுதியில் நேர்ந்த பரிதாபம்..!

5309

கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் புத்தன்குந்நு பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அப்துல்லா. இவருக்கு சீஸ்-ஷஜினா என்ற மனைவியும், ஷஹ்லா ஷெரின் என்ற மகளும் உள்ளனர்.

சுல்தான் பத்தேரி அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த ஷஹ்லா ஷெரின், வகுப்பறையில் இருந்தபோது, ஏதோ அவரது காலை கடித்துள்ளது. இதனால் வலியால் துடித்த சிறுமி, இதுகுறித்து ஆசிரியரிடம் கூறினாள்.

அதற்கு, எதுவும் கடிக்கவில்லை, வகுப்பறையில் இருந்த பொந்தில் சிறுமி காலை நுழைத்ததால் ஏற்பட்ட காயம் என்று அலட்சியமாக நினைத்துக்கொண்டு, அவரது பெற்றோருக்கு ஆசிரியர் தகவல் கொடுத்தார். மாணவியின் தந்தை வந்தபிறகு மருத்துவமனைக்கு மாணவியை அவர் அழைத்து சென்றார்.

மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்குள், அவரது உடல் முழுவதும் நீல நிறமாக மாறியுள்ளது. மருத்துவமனை சென்றதும், அங்கு சோதனை செய்த மருத்துவர்கள், மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், அவரை நஞ்சு பாம்பு கடித்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

இதனைக்கேட்ட மாணவியின் தந்தை மருத்துவமனையிலேயே கதறி அழுதார். பாம்பு கடித்த மாணவியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், அலட்சியமாக ஆசிரியர் இருந்த சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of