13 வயது சிறுமி பலி..! தாயின் சேலையால் நேர்ந்த விபரீதம்..!

601

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கோட்டார் குலாலர் தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகள் அக்ஷயா என்பவர் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று தனது தாயின் புடவையில் ஊஞ்சல் செய்து விளையாடிக்கொண்டு இருந்தார் அக்ஷயா. அப்போது, சிறுமியின் கழுத்தில், சேலை இறுக்கி, மூச்சு திணறி துடிதுடித்து உயிரிழந்தார்.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், சிறுமியின் உடலை கீழே இறக்கினர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement