விளையாட சென்ற 7 வயது சிறுமி – பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி

436

சாத்தான்குளம் அருகே உள்ள கல்விளை பகுதியை சேர்ந்த சேகர் என்பவருடைய 7வயது மகள், விளையாட சென்றதாக கூறப்படுகிறது. விளையாட சென்ற சிறுமி திடீரென காணாமல் போனதால், உறவினர்கள் அக்கம்பக்கம் முழுவதும் தேடியுள்ளனர்.

இந்நிலையில், வடலிவிளையில் உள்ள ஓடை பகுதியின் பாலத்திற்கு அடியில் இருந்த தண்ணீர் டிரம்மில்  சிறுமி உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமியின் உதட்டில் ரத்த காயங்கள் இருந்ததால், அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக  சந்தேகத்தின்பேரில் இருவரை பிடித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்தார்.