மந்திர சக்திக்காக.. சிறுமிக்கு நேர்ந்த படுபயங்கரம்.. உறவினரின் கொடூர முகம்..

1531

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுமி, கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நெருங்கிய உறவினர் ஒருவர், சிறுமியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றது சிசிடிவி காட்சிகளின் மூலம் தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், மாந்திரீக சக்திகளை பெறுவதற்காக, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, நரபலி கொடுத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், அந்த நபரை கைது செய்தனர். மந்திர சக்தியை பெறுவதற்காக, சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement