ஆரத்தி எடுக்கும் போது தனக்குத்தானே பொட்டு வைத்த தமிழிசை! வெளியான வீடியோ!

775

தமிழகத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொருவரும் வித்தியாசமான முறையிலும், மக்களை கவரும் வகையிலும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி பாஜக வேட்பாளரான தமிழிசை சௌந்திரராஜன், அங்கு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தமிழிசைக்கு ஆரத்தி எடுக்கிறார்கள். ஆரத்தி எடுப்பவர் கையில் ஒரு குழந்தை உள்ளது.

ஆரத்திய காட்டியதும், தமிழிசைக்கு பொட்டு வைக்கும்படி அந்த குழந்தையை வைத்திருந்தவர் சொல்கிறார். குழந்தையோ திருதிருவென விழிக்கிறது. கடைசியில், தமிழிசையே அந்த குழந்தையின் கையை பிடித்து ஆரத்தி தட்டில் வைத்து.

பொட்டை எடுத்து தன் நெற்றியிலேயே தானே வைத்து கொள்ளுகிறார். இதுதொடர்பான வீடியோவை தமிழிசை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.