வைக்கோல் அருகே விளையாடிய சிறுமிகள் உயிரிழப்பு..! திடீரென படர்ந்த பயங்கரம்..!

1361

ஒடிசா மாநிலம் கலஹாண்டி மாவட்டம் பிஜ்மாரா கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் அருகே 3 சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென வைக்கோலில் தீ பற்றி கொண்டது. காற்று வேகமாக வீசியதால், அப்பகுதி முழுவதும் தீ மளமளவென பரவியது. இதில், வைக்கோல் அருகே விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுமிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மூன்று சிறுமிகளின் சடலத்தை மீட்டு பிரேத பரிதோசனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

90 சதவீத தீ காயங்களிடன் மூன்று சிறுமிகளும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of