தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு – பள்ளிக் கல்வித்துறை

132
Government-School

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு இந்த ஆண்டு முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதையடுத்து சுமார் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும் 70 லட்சத்து 59 ஆயிரத்து 982 மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், மாணவர்களின் பெயர், புகைப்படம், முகவரி, அடையாள அட்டை எண், பிறந்த தேதி, தந்தையின் பெயர், ரத்த பிரிவு உள்ளிட்ட முக்கிய விவரங்களுடன் பார் கோடு அல்லது க்யூ-ஆர் கோடு ஆகியவை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் கார்டின் மூலம், மாணவர்கள் பள்ளி நேரத்தில் வெளியில் சுற்றித் திரிந்தால் அவர்கள் எந்த பள்ளியை சேர்ந்தவர்கள் என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக மாணவர்களின் சுய விவரங்கள் அடங்கிய மென்பொருள் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் தயாரித்து அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், திட்டத்தை செயல்படுத்தவும் 12 கோடியே 70 லட்சத்து 79 ஆயிரத்து 676 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here