பதவியேற்பின்போது பலத்த கைதட்டல் வாங்கிய ஸ்மிரிதி இராணி

389

பாராளுமன்ற கூட்டத்தொடரில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். மத்திய ஜவுளித்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி எம்.பி.யாக பதவி ஏற்றபோது அதிக கைதட்டல் கிடைத்தது.

பாராளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியநிலையில், புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். மத்திய ஜவுளித்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, எம்.பி.யாக பதவி ஏற்றபோது அதிக கைதட்டல் கிடைத்தது.

அவர் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தோற்கடித்தவர் ஆவார்.அவரது பெயரை அழைத்தவுடன், பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ‌ஷா, மத்திய மந்திரிகள் உள்ளிட்ட பா.ஜனதா உறுப்பினர்கள் நீண்ட நேரம் மேஜையைத் தட்டி உற்சாகப்படுத்தினர்.

இந்தியில் பதவிப்பிரமாண உறுதிமொழியை வாசித்த ஸ்மிரிதி இரானி, இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமாருக்கு வணக்கம் தெரிவித்தார். சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களையும் அவர் வணங்க, அவர்களும் பதில் வணக்கம் தெரிவித்தனர். அந்த நேரத்தில், ராகுல் காந்தி சபையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of