ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா முதலிடம்

179

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள, ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா முதலிடத்தை பிடித்துள்ளார்.

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் 751 புள்ளிகளுடன் ஸ்மிருதி மந்தனா முதலிடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சதம் மற்றும் ஆட்டமிழக்காமல் 90 ரன்களைக் குவித்த நிலையில் இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

இந்தப் பட்டியலில் இரண்டாவது, மற்றும் மூன்றாவது இடங்களை முறையே ஆஸ்திரேலிய வீராங்கனைகளான எல்லிஸ் பெர்ரி மற்றும் மெக் லேன்னிங் ஆகியோர் பிடித்து உள்ளனர். நியூசிலாந்தின் எமி சாட்டர்வொயிட் 4ஆம் இடத்திலும், இந்தியாவின் மிதாலி ராஜ் 5ஆம் இடத்திலும் உள்ளனர். பந்து வீச்சில் இந்தியாவின் ஜுலான் கோஸ்வாமி 4வது இடத்திலும், பூனம் யாதவ் 8வது இடத்திலும், தீப்தி ஷர்மா 9வது இடத்திலும் உள்ளனர்.