டிவி ஆண்டனாவில் தொங்கிய படி காகத்தை கவ்விய பாம்பு.. – வீடியோ உள்ளே..

392

டிவி ஆண்டனாவில் தொங்கியபடி காகத்தை கவ்விய மலைப்பாம்புவின் வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் இந்த வினோத நிகழ்வு நடைபெற்றுள்ளது . பாம்பு ஒன்று டிவி ஆண்டனாவில் தொங்கியவாறு காகத்தை ருசிபார்த்த சம்பவம் நிகழ்ந்துள்ளது . கிங்ஸ் கிளிப் பகுதியைச் சேர்ந்த கேத்தி கல் என்பவர், தனது வீட்டின் மொட்டை மாடியில் இந்த காட்சியை கண்டதும், அதனை வீடியோவாக எடுத்துக் கொண்டார்.

இதன் பின்னர் கேத்தி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட, அதனை ஏராளமானோர் பகிர்வு செய்து வைரலாக்கியுள்ளனர். முகநூலில் பதிவிட்ட கேத்தி, இதுபோன்ற காட்சியை இதற்கு முன்பு பார்த்திருக்க மாட்டீர்கள்.

எங்கள் வீட்டு ஆண்டனாவில் தொங்கிக் கொண்டு பறவையை பாம்பு ருசி பார்க்கிறது” என்று வீடியோவுக்கு தலைப்பு வைத்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதலங்களில் வேகமாக பரவி வருகிறது.