செயின் பறிக்க முயன்ற இளைஞருக்கு தர்ம அடி

440

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

பழனி திருநகரைச் சேர்ந்த சாந்தி என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் நேற்று மாலை பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஆர்.எப். சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் சாந்தியின் செயினை பறித்து சென்றனர்.

செயினுடன் இரண்டு பேர் தப்பிச் சென்ற நிலையில், ஒருவனை மடக்கி பிடித்த பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.