முகிலன் மாயமான வழக்கு – சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளது – சிபிசிஐடி

319

முகிலன் மாயமான வழக்கில் திடீர் திருப்பமாக அவர் மாயமான தினத்தில் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து வெளியேறிய சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளதாக சிபிசிஐடி போலிசார் தெரிவித்துள்ளனர்.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு உட்பட பல்வேறு போராட்டங்களில் முன்னின்று பங்கேற்றவர் சமூக ஆர்வலர் முகிலன். தமிழ் நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பளரான இவர், கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஆதாரங்களை வெளியிட்டார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பின்னர், மதுரை செல்வதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சென்ற முகிலனை காணவில்லை. இந்த நிலையில் ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்ததில் முகிலன் ரயில் நிலையத்திலிருந்து வெளியேறிவிட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது

இந்த நிலையில் முகிலன் மாயமானது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணையில் எழும்பூர் ரயில்வே காவல்துறை, அவர் ரயிலில் பயணிக்கவில்லை என தெரிவித்தனர்.
மேலும் அவரது அலைபேசி தொடர்பு கூடுவாஞ்சேரி அருகே இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், ரயில் நிலையத்திற்குள் வந்த சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளதாகவும் சிபிசிஐடி போலிசார் தெரிவித்துள்ளனர்.

இதுவரை 150 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாகவும் அவரது அலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்ட இடத்தில் சிலரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of