சோசியல் மீடியா பிரபலம் மன்னை சாதிக் கைது..! அதிர வைக்கும் காரணம்..!

438

சமூக வலைதளங்களில் பிரபலமாவதற்கு, சிலர் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவர். ஆனால், ஒரு சிலர் கோமாளித்தனமாக பேசுவது போன்ற வீடியோக்களை பதிவிட்டு பிரபலம் அடைவார்கள்.

இந்த மாதிரி வீடியோவை பதிவிட்டு பிரபலம் அடைந்தவர்களில் ஒருவர் மன்னை சாதிக்.

இந்நிலையில் இவர் தெலங்கானாவின் ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனைப் பற்றி தவறாக சித்தரித்து புகைப்படத்தை பதிவிட்டதால், போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

மேலும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மன்னை சாதிக், திருச்சி மத்திய சிறையில் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.