முக்கிய புள்ளிகளை சிக்க வைத்த பேஸ்புக்

274

கடந்த ஒரு மாதத்தில் அதாவது, பிப்ரவரி 1 முதல் மார்ச் 2 வரை பேஸ்புக்கில் அரசியல் விளம்பரங்களுக்காக அதிகமாக செலவு செய்த 50 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சமூக வலைதளங்கள் மூலமாக அரசியல் கட்சிகளும் அரசியல் பிரமுகர்களும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகின்றனர்.இதற்காக விளம்பரங்கள் மூலம் பணத்தை செலவு செய்கின்றனர். அந்த வகையில், பேஸ்புக் மூலம் பிரச்சாரம் செய்து அதிக பணத்தை செலவிட்டவர்களில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

வெளியாகியுள்ள பட்டியலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி 27 வது இடத்திலும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 44 வது இடத்திலும் உள்ளனர்.

ஜெகன்மோகன் ரெட்டி, 25 விளம்பரங்களுக்கு ரூ.1,79,682, சந்திரபாபு நாயுடு 13 விளம்பரங்களுக்காக ரூ.90,975 செலவு செய்துள்ளார். ஆனால், இந்த பணம் எப்படி வந்தது விளம்பரங்களுக்கு யார் செலவு செய்தார்கள் என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.