இரவில் நைட் ஷிப்ட்..! பகலில் தனிமை..! – 16 மாநில இளம்பெண்கள்..! – சென்னை சாஃப்ட்வேர் எஞ்சினியரின் மிரளவைக்கும் செயல்..!

3031

லட்சக்கணக்கான ரூபாய் சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 16 மாநில அப்பாவி இளம்பெண்களை, நிர்வாணமாக்கி, வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த சென்னை சாப்ட்வேர் என்ஜினியரை, ஆந்திர போலீசார் பொறி வைத்து பிடித்திருக்கின்றனர்.

ஹைதராபாத் இளம்பெண் அளித்த துணிச்சலான புகார், கேடுகெட்ட செயலை அரங்கேற்றி வந்த கொடூரனை சிக்க வைத்திருக்கிறது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின், ஹைட்டெக் சிட்டியான, ((HiTech City)) சைபராபாத்திற்குட்பட்ட((Cyberabad)) பகுதி மியாப்பூர்.((Miyapur)). இங்குள்ள காவல்நிலையத்தில், கடந்த ஏப்ரல் மாதத்தில், இளம்பெண் ஒருவர், புகார் அளித்தார்.

அதில், பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை வாங்கித் தருவதாக கூறி, தனது நிர்வாண படத்தை வைத்து, ஒருவர், தன்னை மிரட்டுவதாகவும், அவர் சென்னையை சேர்ந்தவர் என்றும் கூறி, தனது வாட்ஸ் ஆப் உரையாடலையும், அந்த நபரின் செல்போன் எண்கள் உள்ளிட்ட தகவல்களையும் அளித்துள்ளார்.

இதையடுத்து, சைபர் கிரைம் போலீசார் உதவியுடன், கடந்த 4 மாதங்களாக, இளம்பெண்ணின் நிர்வாண வீடியோவை வைத்து மிரட்டிய நபரை தேடிவந்த, தெலங்கானா போலீசார், அந்த நபரை, சென்னையில் வைத்து கைது செய்திருக்கின்றனர்.

அவனது செல்போன் மற்றும் கணிப்பொறியை ஆராய்ந்தபோது, தெலங்கானா போலீசார் அதிர்ந்து போயினர்.. கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் நிர்வாண வீடியோக்கள், 2 ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாண புகைப்படங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியின் உச்சத்துக்கே போலீசார் சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து அவனிடம் விசாரித்தபோது, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதீப் என்று பெண்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவனது உண்மையான பெயர், கிளமெண்ட் ராஜ் என்பதும், சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவன் என்பது தெரியவந்துள்ளது. இவன் சென்னையில் உள்ள பிரபல சாப்ட்வேர் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்திருக்கிறான்.

இவனது மனைவியும் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றுவதாக கூறப்படுகிறது. பிரதீப் என்கிற கிளமெண்ட் ராஜ், இரவு ஷிப்டில் பணியாற்றியிருக்கிறான். இவன் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்புபோது, அவனது மனைவி, பணிக்கு புறப்பட்டுச் சென்றுவிடுவதும் தெரியவந்துள்ளது.

பகல் நேரங்களில், வீட்டில் தனிமையில் இருந்த பிரதீப், பிரபல வேலைதேடும் இணையதளத்தில், தன்னை HR என பதிவு செய்து, பிரபல நட்சத்திர விடுதிக்கு, வரவேற்பாளர் தேவை எனக்கூறி, இளம்பெண்களின் எண்களை சேகரித்திருப்பதாக, மியாப்பூர் போலீசார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

முதலில், தாம் சேகரித்த செல்போன் எண்களில், இளம்பெண்களிடம் தொடர்பு கொண்டு பேசிய சாப்ட்வேர் என்ஜினியர் பிரதீப் என்கிற கிளமெண்ட் ராஜ், அவர்களோடு ஜாலியாக பேசி, தனது பாலியல் தாகத்தை தீர்த்துக் கொண்டிருக்கிறான். நாளடைவில், வேலை தேடிக் கொண்டிருக்கும் அழகான பெண்களை ஏமாற்றி பணம் பறிக்க நினைத்தவன், அதை நோக்கி நகர்ந்திருக்கிறான்.

அந்த வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட இளம்பெண்களின் செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளும் பிரதீப், தங்களது நட்சத்திர விடுதிக்கு, லட்ச ரூபாய் சம்ளத்தில், வரவேற்பாளர் தேவை என கூறி, தொலைபேசியிலேயே இண்டர்வியூ செய்திருக்கிறான். பின்னர், தங்கள் புகைப்படத்தை நம்ப இயலாது என்றும், எனவே, தமது பெண் ஹெச்.ஆர். வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொள்வார் என்றும் கூறியிருக்கிறான்.

இதையடுத்து, பெண் பெயரில், அவனே, அந்த இளம்பெண்களை வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொண்டிருக்கிறான். அப்போது, தங்களது தற்போதைய புகைப்படத்தை எடுத்து அனுப்புமாறு கூறியிருக்கிறான். புகைப்படத்தை அனுப்பும் பெண்களிடம், தாங்கள் அழகாக இருக்கிறீர்கள்… இருந்தாலும்., தங்களது உடலமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பார்க்க வேண்டும்…

தானும் ஒரு பெண் என்பதால், எந்த பிரச்சினையும் எழாது எனக், பெண் ஹெச்.ஆர் போர்வையில் தேனொழுகப் சாட் செய்துள்ளான். இதனை நம்பி, பெண்களும், தங்களது முழு உடல் நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பியிருக்கின்றனர்…

அப்போது, வாட்ஸ் ஆப் வீடியோ காலில் வருமாறும், ஒருமுறை நேரில் பார்த்துவிடலாம் என பெண் ஹெச்.ஆர் போர்வையில் கூறியிருக்கிறான். பெண் ஹெச்.ஆர் தான் எதிர்முனையில் இருக்கிறார் என நினைத்த, அப்பாவி இளம்பெண்களும், நிர்வாணமாக வீடியோ காலில் வந்துள்ளனர்.

இதனை பிரத்யேக சாப்ட்வேர் மூலம், மொபைல் போனில் பிரதீப் சேமித்து வந்திருக்கிறான். சில நாட்கள் கழித்து, அந்த பெண்களை தொடர்பு கொள்ளும் பிரதீப் என்கிற கிளமெண்ட் ராஜ், தன்னிடம் உங்களது நிர்வாண வீடியோக்கள் இருக்கிறது எனக்கூறி, அவர்களை மிரட்டி பணம் பறித்திருக்கிறான்.

இந்த தகவல்களை அறிக்கையாக வெளியிட்டிருக்கும் சைபராபாத் நகரின், மியாப்பூர் காவல்நிலைய போலீசார், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த 600 பெண்களின் வீடியோக்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of