துப்பாக்கி முனையில் ராணுவ வீரர் கடத்தல்

178

காஷ்மீர் மாநிலம் புட்காம் பகுதியில் விடுமுறையைக் கழிக்க சொந்த ஊருக்கு வந்த முகமது யாசிம் பட் என்ற ராணுவ வீரரை தீவிரவாதிகள் வீடு புகுந்து துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர்.

தீவிரவாதிகள் ராணுவ வீரரை காட்டுக்குள் கடத்திச் சென்றதாக கூறப்படுவதை அடுத்து, அவரை மீட்பதற்காக காட்டைச் சுற்றிலும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.