சீன எல்லையில் நிறுத்தப்பட்ட ராணுவ வீரர்கள்.. தற்போதைய நிலை.

170

லடாக் எல்லை அருகே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய சீன ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். சீன தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது.

இதன்பின், இருநாட்டு ராணுவப் படைகளும் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே குவிக்கப்பட்டன. இந்திய எல்லையை ஒட்டி சீனா முகாம்களையும், ஹெலிபேடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைத்தது.

பதிலுக்கு இந்தியாவும் தனது படைகளை எல்லை நோக்கி நகர்த்தியது. இதனால் எல்லையில் போர் பதற்றம் நிலவியது. இதன்பின்பு நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டியதை அடுத்து சீனா தனது துருப்புகளை விலக்கியது.

இந்நிலையில் ஹாட்ஸ்பிரிங், கோக்ரா ஆகிய பகுதிகளில் இருந்து சீன ராணுவ வீரர்கள், தங்களது எல்லையை நோக்கி சென்றனர். கடந்த 6ம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைகோள் புகைப்படங்களின் மூலம் இது தெரியவந்தது. இருப்பினும் லடாக் எல்லையியை 24மணி நேரமும் இந்திய ராணுவம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of